ஒரு Professional Power BI Dashboard உருவாக்குவது எப்படி? | The Decision-Making Tool
நம்மில் நிறைய பேர் Dashboard-னா என்னன்னு கேட்டா, விதவிதமான கலர்ஸ்ல நிறைய Graphs மற்றும் Charts இருந்தா அதுதான் டேஷ்போர்டு-னு நினைக்கிறோம். ஆனா உண்மை அது கிடையாது.
டேஷ்போர்டு-ன்றது ஒரு Decision Supporting Tool. அதாவது, ஒரு பிசினஸோட அடுத்த கட்ட மூவ் (Next Move) என்னவா இருக்கணும்னு டிசைட் பண்ண ஹெல்ப் பண்ற ஒரு டூல் தான் இந்த டேஷ்போர்டு.
டேஷ்போர்டு பதில் சொல்ல வேண்டிய 3 முக்கியமான கேள்விகள்:
ஒரு பிசினஸ் யூசர் உங்க ரிப்போர்ட்டைப் பார்த்த 5 செகண்ட்ல இந்த மூணு விஷயத்தையும் புரிஞ்சுக்கணும்:
- சேல்ஸ் நல்லா இருக்கா? இல்லையா? (Performance)
- சேல்ஸ் அதிகமாகுதா? இல்ல குறையுதா? (Trend)
- எந்த ப்ராடக்ட் அல்லது கஸ்டமர் நமக்கு ரொம்ப முக்கியம்? (Priority)
உங்க டேஷ்போர்டு இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லலன்னா, அந்த டிசைன் Fail ஆயிடுச்சுன்னு தான் அர்த்தம்.
Dashboard Foundation & Setup (அடித்தளம்)
ஒரு சூப்பரான ரிப்போர்ட்டை கிரியேட் பண்ண இந்த ஸ்டெப்ஸை ஃபாலோ பண்ணுங்க:
- Canvas Settings: எப்போதுமே 16:9 ரேஷியோ யூஸ் பண்ணுங்க. இதுதான் எல்லா டிஸ்ப்ளேவுக்கும் கரெக்டா ஃபிட் ஆகும்.
- Page Naming: 'Page 1'னு வைக்காம, "Executive Overview"-னு அந்த பேஜுக்கு ஏத்த மாதிரி ஒரு சரியான பேர் வைங்க.
- Background Color: பேக்ரவுண்ட் கலரை முடிஞ்ச வரைக்கும் ஒயிட் (White) அல்லது கிரே (Grey) கலர்ல வைங்க. ரொம்ப கலர்ஃபுல்லா இருந்தா டேட்டாவை பார்க்கிறப்போ கண்ணை உறுத்தும், யூசரையும் Distract பண்ணும்.
The Golden Rule: One Page = One Story
ஒரு முக்கியமான கோல்டன் ரூல் - ஒரு பேஜ்ல ஒரு கதையை மட்டும்தான் சொல்லணும். எல்லா டேட்டாவையும் கொண்டு வந்து ஒரே பேஜ்ல திணிக்காதீங்க. முதல்ல ஒரு Overview குடுத்துட்டு, அதுக்கப்புறம் வர்ற அடுத்தடுத்த பேஜ்ல மத்த டீடெயில்ஸை குடுக்கலாம்.
Building the Soul: KPI Cards
டேஷ்போர்டோட இதயம்னு இந்த KPI Cards-ஐ சொல்லலாம். இதை எப்போதுமே மேல லெஃப்ட் (Top Left) சைடுல வைங்க. ஏன்னா நம்ம கண்ணு முதல்ல அங்கதான் போகும்.
- Total Sales: பிசினஸ் எப்படி போயிட்டு இருக்குன்னு சொல்லும்.
- Total Orders: ஒரு நாளைக்கு எவ்ளோ ஆர்டர் வருதுன்னு செக் பண்ணலாம்.
- Average Order Value (AOV): ஒரு கஸ்டமர் ஆவரேஜா எவ்ளோ செலவு பண்றாங்கன்னு தெரிஞ்சுக்கலாம்.
- Total Customers: எவ்ளோ பேர் நம்ம பிசினஸை நம்பி வர்றாங்கன்னு காட்டும்.
Pro Tip: 4-லிருந்து 6 கார்டுகளுக்கு மேல வைக்காதீங்க. அப்பதான் பார்க்க நீட்டா இருக்கும்.
Tracking Growth with Line Charts
பிசினஸ் வளர்ச்சியை (Growth) டிராக் பண்ண பெஸ்ட் சாய்ஸ் Line Chart.
- Axis Setup: இதில் எப்போதுமே 'Calendar Table' டேட்டாவை மட்டும்தான் யூஸ் பண்ணணும்.
- Cleaning: சார்ட்ல தேவையில்லாத டைட்டில்ஸ் மற்றும் கிரிட் லைன்ஸை (Grid lines) எடுத்துருங்க.
- Data Labels: நம்பர்ஸ் தெளிவா தெரிய Data Labels-ஐ எனேபிள் பண்ணுங்க.
இது மூலமா மந்த்-ஆன்-மந்த் (Month-on-Month) பிசினஸ் ஏறுதா இல்ல இறங்குதான்னு ஈஸியா சொல்லிடலாம்.
Conclusion (முடிவுரை)
டேஷ்போர்டு டிசைன் பண்றப்போ Consistency ரொம்ப முக்கியம். எல்லா சார்ட்டும் ஒரே மாதிரி ஸ்பேஸிங்ல, கரெக்டான ஃபான்ட் சைஸ்ல இருக்கணும். இப்படி நீங்க பண்றப்போ தான் அந்த ரிப்போர்ட் ஒரு ப்ரொபஷனல் லுக் தரும்.
%20(1).png)
கருத்துரையிடுக
0 கருத்துகள்